பிரித்தானியாவை விடவும் 4 மடங்கு பெரிதான விண்கல்லொன்று பூமிக்கு அண்மையில் கடந்து செல்லவுள்ளதாகவும் அதனை இரவு நேரத்தில் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் எனவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘4 வெஸ்ட்ரா’ அல்லது ‘ வெஸ்ட்ரா’ என அழைக்கப்படும் இந்த இள மஞ்சள் நிற ஒளியுடன் காணப்படும் விண்கல்லை அது பூமியிலிருந்து 106 மில்லியன் மைல் தொலைவில் பயணிக்கையிலேயே வானில் அவதானிக்க முடிவது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கல்லை பூமியின் வட மற்றும் தென் அரைக்கோளங்கள் இரண்டிலுமிருந்துமே அவதானிக்கக் கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும்.
அத்துடன் மேற்படி விண்கல்லை இரவு நேரத்தில் செவ்வாய்க்கிரகத்துக்கும் சனிக்கிரகத்துக்கும் அண்மையில் தனுசு நட்சத்திரத் தொகுதியில் காணக்கூடியதாக இருக்கும் என விண்வெளி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த 310 சதுர மைல் பரப்பளவான பிரகாசமான விண்கல் பூமியில் மோதுமா என அஞ்சத் தேவையில்லை எனவும் அது எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிவரை வானில் தென்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விண்கல்லின் அளவு பிரித்தானியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ள நாசா, பூமியில் டைனோசர் இனத்தை அழித்த விண்கல்லை விட இது இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த விண்கல் பூமியில் விழுந்தால், பூமியின் நான்கில் மூன்று பகுதி அழித்துவிடும் என்றும் கூறப்படுகிறது.