சின்னத்திரையில் எப்போதும் TRP-க்கான போட்டி கடுமையாக நடக்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி TRP வேறு லெவலுக்கு சென்றது கடந்த வருடம்.
ஆனால், இந்த வருடம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பிக்பாஸ்-2 TRP இருக்கின்றதா? என்றால் கேள்விக்குறி தான், ஏனெனில் ஓவியா போல் அந்த வீட்டில் ஒரு கடுமையான போட்டியாளர் யாருமில்லை.
மக்களிடையே ஆர்வமும் குறைந்துவிட்டது, இந்நிலையில் கடந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சியாக சன் டிவியே இருக்க, விஜய் டிவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் இடம்பிடிக்கவே இல்லை, மேலும், பிக்பாஸ் ஒளிப்பரப்பான சமயத்தில் கூட விஜய்யின் தெறி படமே அதிக TRP பெற்றுள்ளது.