தரமற்ற வாகனத்துக்கு அனுமதியில்லை

214

அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் எஸ்.பி.இந்திய ஹப்புகொட தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தரமற்ற வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிப்பதால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் வாகனங்கள் கோளாறுகளுக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

எனவே இதன் காரணமாகவே நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை சோதனைகுட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கென பிரத்தியேக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர், வாகனங்களின் சுக்கான்களையும், பிரேக் கருவிகளையும், ஆசனப் பட்டிகளையும், வேகமாணிகளையும் சோதிப்பார்கள். அவற்றுடன் நியம தராதரங்களுக்கு அமைவாக டயர்களை கொண்டிராத வாகனங்களும் சோதனைகளில் தேராத வாகனங்களும் நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது.

அத்துடன் அதிகவேக நெடுஞ்சாலைகளில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் 1969 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உதவியை நாட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE