பூச்சிகளின் தாக்கத்தினால் வேளாண்மைகள் பாதிப்பு – விவசாயிகள் கவலை

139

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் பூச்சிகளின் தாக்கத்தினால் வேளாண்மைகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனேரி குளத்தை நம்பி விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் ஐயாயிரத்து மேற்பட்ட ஏக்கர் வயல்கள் அறக்கொட்டி பூச்சியின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதனை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகள் எழுபதாயிரம் ரூபாவுக்கு மேல் மருந்துகள் கொள்வனவு செய்து ஐந்து தடவைக்கு மேல் மருந்து தெளித்துள்ளதாகவும், அவ்வாறு மேற்கொண்டும் பூச்சிகள் அழியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அறக்கொட்டி பூச்சியின் தாக்கத்தினால் நெல்கள் பாதிக்கப்பட்டமையால் பூச்சிகளை கட்டுப்படுத்த பல ஆயிரம் செலவழித்து மருந்துகள் கொள்வனவு செய்தாலும், நெல்களை விற்பனை செய்தால் அந்த பணம் கூட கிடைக்குமாக என்ற சந்தேகம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் விவசாய திணைக்களத்திற்கு அறிவித்தும் எந்தவித அதிகாரிகளும் வருகை தந்து பூச்சிகளை அழிப்பதற்கு ஏற்ற மருந்துகளை சொல்வதில்லை. ஆனால் நாங்கள் கடைகளுக்கு சென்று கடையில் தரும் மருந்துக்களை பயன்படுத்துவதால் எந்தவித நன்மையும் கிடைப்பதில்லை.

இவ்வாறு தொடர்ந்து மருந்து தெளித்து தெளித்து வயல்களை பாதுகாத்து வந்தால் பின்னர் நெல் அறுவடை செய்து நெல்லினை விற்பனை செய்யும் போது குறைந்த விலையில் கிடைத்தால் நாங்கள் எங்களது கடனை செலுத்த முடியாமல் நஞ்சறுந்த வேண்டிய நிலைதான் ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.

எனவே ஐயாயிரத்து மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கையில் பூச்சிகளின் தாக்கத்தினால் பதிக்கப்பட்ட விவசாயிகளின் நன்மை கருதி உரிய அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டு நல்ல தீர்வை வழங்குமாறு வேண்டுவதுடன், அரசாங்கம் நெல்களை கூடிய விலைகளில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

SHARE