உலகில் லஞ்ச லாவண்யமற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஸ்வீடன் இடம்பெற்றுள்ளது. உலகின் 55 முக்கிய நாடுகளை தெரிவு செய்து, 2018-ன் முதல் காலாண்டில் அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனை கணக்கில் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். வாழத் தகுந்த நாடு, பணி புரிய சிறந்த நாடு, சுற்றுலாவுக்கு உகந்த நாடு என பல்வெறு வகைகளில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு 3-வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. மட்டுமின்றி நெறிமுறை தவறாத 4 நாடுகளில் ஸ்வீடனும் ஒன்று என ஆய்வில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி வெளிப்படைத்தன்மையும், மிக மிக குறைந்த அளவு ஊழலுடன் உயர்ந்த நெறிமுறை கொண்ட நாடு ஸ்வீடன் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த முறை 7-வது இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகில் நற்பெயருள்ள நாடுகளின் பட்டியல்
ஸ்வீடன்
பின்லாந்து
சுவிட்சர்லாந்து
நார்வே
நியூசிலாந்து
அவுஸ்திரேலியா
கனடா
ஜப்பான்
டென்மார்க்
நெதர்லாந்து