மஹிந்தவிற்கு வழங்கப்பட்ட பணம் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் வைப்பு?

158

சைனா ஹார்பர் (China Harbor) நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கிய 112 கோடி ரூபா பணம் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திடம் வினவ உள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால், அமீரக அரசாங்கத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு வினவப்பட்டது என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

SHARE