ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

174

ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனமானது தனது தொண்டு சேவையின் அடிப்படையில் கல்வி வாழ்வாதாரம் மற்றும் தொழில் முயற்சி போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் சேவையை விஸ்தரித்து வட கிழக்கு பகுதிகளில் புதியதொரு தடம்பதித்து சிறப்பு மிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.

அதன் ஒரு அம்சமாக கடந்த கால யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு தனது இரு கைகளில் உள்ள 09 விரல்களையும் இழந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட எஸ். சிறிகரனது தொழில் முயற்சிக்கு 27.06.2018 அன்று மீன் வியாபார தொழிலுக்கான உபகரணங்கள் அனைத்தையும் வழங்கி வைத்துள்ளது.
இவ் உபகரணங்களுக்கான நிதியுதவியை ஜேர்மனி பிரசாத் நற்பணி மன்றம் மற்றும் ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து வழங்கி வைத்ததுடன் மீன் வியாபார தொழிலுக்கான உபகரணங்களாக 212000/= ரூபா செலவில் ஒரு உந்துருளி, மீன் கொள்வனவு செய்வதற்கான இரு பெட்டிகள், ஒரு ரெஜீபோம் பெட்டி, மீன் விற்பனை செய்யும் வண்டில் ஒன்று அத்துடன் தராசு மற்றும் மீன் கொள்வனவு செய்வதற்காக 5000 ரூபாவும் வழங்கி வைத்துள்ளது.
இந்நிகழ்வானது நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம்.டிலானின் தலைமையில் ஒருங்கமைப்பு செய்ததுடன் இதன் போது முல்லைத்தீவு திருமலை மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஜேர்மனி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த பயனாளி சிறிகரன் கடந்த யுத்த சூழ்நிலையின் பின்னர் எனது குடும்பத்தை நான் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் பராமரிப்பு செய்து வந்தேன் எனது பிள்ளைகளின் கல்வி செலவுகளும் அவ்வாறே அமைந்தது அந்தவகையில் எனது வாழ்வாதாரத்தை மேம்பாடுத்துவதற்காக ஜேர்மனி உதயம் நிறுவனத்திடம் உதவி கோரியிருந்தேன் அதன் பிரகாரம் பிரசாத் நற்பணி மன்றமும் ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இன்று எனக்கு தொழில் வாய்ப்புக கான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது. அந்தவகையில் இவ்விரு ‘அமைப்புகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் கூறினார். இச்செயற்பாட்டுக்கு நிதியை வழங்கிய ஜேர்மனி பிரசாத் நற்பணி மன்றம்  (willich) 100,000.ரூபாவும் மிகுதியை வழங்கிய  HAMM மற்றும் Münster வாழ் உறவுகளுக்கும் பணியாளர்களுக்கும் உதயம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
SHARE