இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க பிரிட்டன் எம் பி யை வலியுறுத்திய நாடு கடந்த தமிழீழ அரசு

197
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீ லங்கா அரசு, இராணுவத்தினரால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக்கு எதிராக இலங்கையை சர்வதேச நீதி மன்றத்திற்கு பரிந்துரை செய்யக்கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்  லண்டன் Lewisham பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  Vicky Foxcroft அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த 22.06.2018 அன்று மதியம் 2.30 மணியவில் lewisham பகுதியில் நடைபெற்றிருந்த சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் மனித உரிமை அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன், உறுப்பினர்களான யதுர்சன் சொர்ணலிங்கம், நுஜிதன் இராசேந்திரம், அசாந்தன்  தியாகராசா,
கேசவன் சுப்பிரமணியம், பொன்ராசா புவலோஜன், தீபன் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்
 
குறித்த சந்திப்பில் தற்போது தமிழர் தாயகப்பகுதிகளில் நடைபெற்றுவரும், தொடர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பாகவும் , இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் காணிகள் ,தமிழர் பகுதிகளில்  புதிதாக அமைக்கப்படுகின்ற  புத்தவிகாரைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான இலங்கை அரசின் மெத்தனப்போக்கு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் , மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட்டதுடன் நாடு கடந்த தமிழீழ அரசின் கண்ணானிப்பு குழுவின் (MAP) அறிக்கையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு ஏன் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது பற்றிய அறிக்கையும் குறித்த உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE