சமாரா எரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய எச். குழு போட்டியில் செனகலை எதிர்த்தாடிய கொலம்பியா, ஒரு கோல் போட்டு வெற்றிபெற்றதன் மூலம் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்திலிருந்து முதலாம் இடத்துக்கு முன்னேறி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
இரண்டு அணிகளும் வெற்றியை குறிவைத்து விளையாடிபோதிலும் செனகலுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.
போட்டியின் 74ஆவது நிமிடத்தில் யுவான் குவின்டீரோவின் கோர்ணர் கிக்கை முறையாகப் பயன்படுத்திக்கொண்ட யெரி மினா உயரே தாவி தலையால் முட்டி அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு செனகலின் இரண்டாம் சுற்று கனவை கலைத்தார்.