கீர்த்தி சுரேஷிற்கு அடித்த ஜாக்பாட்- முன்னணி நடிகருடன், பிரம்மாண்ட இயக்குனர் படத்திலா?

176

நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷின் அடுத்த படங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன.

அதில் ஒரு செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்க இருக்கும் பிரம்மாண்ட படத்தில் கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது படத்திற்கு RRR என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE