மொடல் ஆவதற்கு வயது ஒரு தடையில்லை: நிரூபித்த பெண்மணி

161

அமெரிக்காவில் இருக்கும் லின் ஸ்லேட்டர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். சில வருடங்கள் முன்பு தனது நண்பரை பார்ப்பதற்காக நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோவிற்கு சென்றார். அப்போது உணவு இடைவேளை என்பதால் அவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அவர் காத்திருந்த சமயத்தில் இரண்டு ஜப்பானிய பத்திரிகையாளர்கள் வந்து லின்னை புகைப்படம் எடுத்தனர். சில பல கேள்விகளும் கேட்டனர். அவர்கள் எதற்காக இதை செய்கிறார்கள் என்று லின்னிற்கு புரியவேயில்லை. லின்னின் உடை தேர்வு, நளினம் , அலங்காரம், கைப்பை போன்றவற்றை பார்த்து அவரையும் ஒரு மாடல் என்று அவர்கள் நினைத்துள்ளனர். இதற்குள் பல கேமராக்கள் அவரை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என்று புரியும் முன்பே பிரபலமான மொடல் இவர் மட்டுமாகத்தான் இருந்திருக்க முடியும். இப்படி வித்யாசமான முறையில் பேஷன் துறையில் உள்ளே கால் வைத்திருக்கிறார் லின். அதன்பின் எலைட் லண்டன் நிறுவனம் இவருக்கு மொடலிங் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

அதன்பின் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் மாடலாகி இருக்கிறார் லின்.வயதானவர் என்பதால் லின்னிற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்திருக்கிறது. இதை அணியாதே அதை அணியாதே என்று பல சட்டங்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் அது அத்தனையும் புறம் தள்ளிய லின் தனக்கு பிடித்ததை மட்டுமே அணிகிறார். நான் எதை அழகாக இருக்கிறது என்று நினைக்கிறேனோ அதனை மட்டுமே அணிகிறேன் . அப்படியே ஆபரணங்களும் அணிகிறேன். வயது ஒரு நாளும் என் முடிவுகளுக்கு தடையாக இருக்க முடியாது.ஒவ்வொரு முறையும் எனக்கான புதிய ஆடைகள் வடிவமைக்கப்பட்டு அணியும் போதும் நான் மிக இளமையாக உணர்கிறேன் என்று கூறுகிறார் லின் ஸ்லேட்டர்.உண்மைதான். வயதென்பது மனதின் அகலத்தை பொறுத்ததுதான் என்றுதான் தோன்றுகிறது.

SHARE