அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருந்த மசோதா தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மக்களை வெளியேற்றும் வகையில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சட்டவரைவு ஒன்றை கொண்டுவந்தார். அதன்படி, அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்றால், மிகவும் அதிகபட்ச திறமை தேவைப்படும்.
அதேபோல் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களை தவிர வேறு யாரும் உயர் பதவியில் சேர முடியாது. இந்த மசோதா நேற்று அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவிற்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 301 பேரும் வாக்களித்தனர். இதன் காரணமாக இந்த மசோதா தோல்வியடைந்துள்ளது. இதனால் டிரம்ப் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.அமெரிக்க அவையில் டிரம்ப்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் தான் அதிகம் உள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மொத்த உறுப்பினர்களும், குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.