ஹத்தரிலியத்த நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இளைஞர் ஒருவருக்கு சொந்தமான 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கண்ணாடி ஒன்றை திருடிய மாணவன் பேஸ்புக் பதிவினால் சிக்கியுள்ளார்.
அந்த கண்ணாடியை திருடிய மாணவன் அதனை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை பேஸ்புக்கில் பதிவிட்டமையினால் கையும் களவுமாக சிக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரின் பெறுமதியான கண்ணாடி கடந்த வாரம் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு சென்ற நிலையில் யாரோ ஒருவரால் திருடப்பட்டுள்ளது.
எனினும் யாரால் திருடப்பட்டது என தெரியாமல் இருந்த நிலையில், காணாமல் போன கண்ணாடிக்கு சமமான கண்ணாடி அணிந்து பாடசாலை மாணவன் ஒருவர் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் அந்த மாணவனை தேடி சோதனையிட்ட போது தனது கண்ணாடி என இளைஞன் கண்டுபிடித்துள்ளார்.
மாணவனிடம் விசாரித்த போது குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பின்னர் கண்ணாடியை இளைஞனிடம் மாணவன் ஒப்படைத்துள்ளார்.