இலங்கையின் எரிபொருள் சந்தையில் நாளை முதல் யூரோ 4 விநியோகம்.

169

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நாளை முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இதனையடுத்து நாளை முதல் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்படாது என்று அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் ஒரு வாரத்துக்குள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE