குப்பை கொட்டும் அனைத்து இடங்களிலும், சிசிடீவி கமரா

153

கொழும்பு நகரில் குப்பை கொட்டும் அனைத்து இடங்களிலும், சிசிடீவி கமரா கட்டமைப்பை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கமராக்களை பொருத்துவதற்கு ஊழியர்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் நகர ஆணையாளர் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

சிசிடீவி கமரா கட்டமைப்பு பொருத்துவதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸ் சுற்று சூழல் பிரிவு அதிகாரிகள் 24 மணித்தியாலங்களும் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தினசரி கொழும்பு நகரத்திற்குள் 50 டன் குப்பை சேர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE