வானூர்தி சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனம் கனிய வள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை பெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனம், கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு 12 மில்லியன் ரூபாய் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே எதிர்வரும் புதன்கிழமைக்குள் நிலுவை தொகை செலுத்தப்படாவிடின் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலுவை தொகை செலுத்த வேண்டியமை தொடர்பில் வானூர்தி சேவை நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிக ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.