நுவரெலியாவில் தேசிய அறநெறி விழாவும் அறநெறி விழிப்பு ஊர்வலமும்

155
இந்துமத அலுவல்கள் அமைச்சின் இந்து பண்பாட்டு நிதியத்தின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும்  நடைபெற்று வரும் இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு நுவரெலியாவில் திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனாரின் குரு பூஜையும் தேசிய அறநெறி விழாவும் அறநெறி விழிப்பு ஊர்வலமும் நடைபெற்றது.
நுவரெலியா புனித பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி விநாயகர் அலய பூஜையுடன் ஆரம்பமான ஊர்வலம் நுவரெலியா உடபுஸ்ஸல்லவ வழியாக ஆவேலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்து ஆலய பூஜையுடன் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் தேசிய அறநெறி விழா நடைபெற்றது. நிகழ்வில் அறநெறி மாணவர்களின் கலை கலாச்சரா நிகழ்ச்சிகள் அதிகளின் உரை சமய சொற்பளிவுகள் அறநெறி கொடி அணிவித்தல். அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடம்  சீர் உடை வழங்கள்.  அறநெறி கொடி வாரத்தை முன்னிட்டு ஆவேலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினால் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஐம்பது ஆயிரம் நன்கொடை வழங்கள் போன்றன நடைபெற்றன.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வட மாகான அபிவிருத்தி  மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி கலாநிதி அ. சுரேஸ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பனிப்பானர் அ.உமாமாகேஸ்வரன் உட்பட ஆவேலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினர், அறநெறி பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.
SHARE