ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

247
மத்திய அரசு சமீபத்தில், எம் பாஸ்போர்ட் சேவா என்ற செயலியில் புதிதாய் கடவுச்சீட்டு (பாஸ்ட்போர்ட்) பெறுவோர் விண்ணப்பிப்பதற்கான சேவையை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் இந்த செயலியை கொண்டு கடவுச்சீட்டு எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்துக்கொள்ளுங்கள்.

1. இலவசமாக வழங்கப்படும் எம் பாஸ்போர்ட் சேவா செயலியை ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து நிறுவ வேண்டும் (இன்ஸ்டால் செய்யவும்).

2. செயலி திறந்ததும், திரையில் தோன்றும் புதிய பயனர் பதிவு (நியூ யூசர் ரிஜிஸ்ட்ரேஷன்) விருப்பத்தை (ஆப்ஷன்) க்ளிக் செய்து அதில் உங்களது தகவல்களை பதிவிடவும்.

3. இனி செயலியில் உங்களது முழு விவரங்கள் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பதிவிடவும்.

4. உங்களுக்கான பிரத்யேக லாக் இன் குறியீடு தேர்வு செய்து, அதனை உறுதி செய்து கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) பதிவிட வேண்டும். மின்னஞ்சல் லாக் இன் குறியீட்டை கூட செயலியில் பயன்படுத்தலாம்.

5. கடவுச்சொல் மீட்டமைப்பு (ரீசெட்) செய்வதற்கான பாதுகாப்பு கேள்வி மற்றும் பதில்களையும் பாதுகாப்பு கருதி செட் செய்யவும்.

6. பின்னர் சரிபார்ப்பு குறியீடு (வெரிஃபிகேஷன் கோடு) டைப் செய்து சமர்பிப்பு பொத்தானை (சப்மிட் பட்டன்) க்ளிக் செய்யவும். பின்னர் உங்கள் மின்னஞசல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்படும்.

7. கணக்கு சரிபார்ப்பு (அக்கவுன்ட் வெரிஃபிகேஷன்) மின்னஞ்சலில் வரும் சரிபார்ப்பு லிங்க்-ஐ க்ளிக் செய்து, உங்களின் லாக் இன் அடையாளத்தை (ஐடி) பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

8. செயலியை மறுபடி தொடங்க (ரீஸ்டார்ட்)  இருக்கும் பயனர் (எக்சிஸ்டிங் யூசர்) பொத்தானை க்ளிக் செய்து லாக் இன் ஐடி, கடவுச்சொல் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

9. அடுத்து கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விண்ணப்பிக்க கோரும் பொத்தானை க்ளிக் செய்து, திரையில் தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.

10. விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்திக் கொண்டு கடவுச்சீட்டு பெற ஆவணங்களை சரிபார்க்க அனுமதி பெற வேண்டும்.

SHARE