அரசியல் தலையீடுகளுமின்றி தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும்

191

எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி காணாமல்போனோர் அலுவலகம் தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு  வந்த போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய  காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளமை அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்பதாகவே காணப்படுகின்றது.

இந் நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும். எவ்வித அரசியல் மற்றும் எந்த  தரப்பினருக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் அலுவகலத்தின் செயற்பாடுகள்  அமையாது.

அத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி காணாமல் போனோர் அலுவலகத்தின்  மக்கள் சந்திப்பு கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்க பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் விரைவில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்றார்.

SHARE