ஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி

225

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அந்நாட்டு ஜானாதிபதி அஷ்ரப் கானி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி நிறைவுற்று அவர்  சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உளிட்ட 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE