காவற்துறைக்கு எதிராக இவ்வளவு முறைப்பாடுகளா!!

211

வருடத்தில் நிறைவடைந்த 6 மாத காலப்பகுதியினுள் காவற்துறைக்கு எதிராக காவற்துறை ஆணைக்குழுவிற்கு 625 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

அதன் பொதுமக்கள் பிரிவு பணிப்பாளர் பிரபாத் லக்ஷ்மண் இதனை தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் அசமந்த போக்குடன் செயற்பட்டமை தொடர்பில் 250 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பக்கசார்பாக செயற்பட்டமை தொடர்பில் 90 முறைப்பாடுகளும், அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 173 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஆணைக்குழுவின் பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் பிரபாத் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

SHARE