புலி வந்தா பெண்களாவது பாதுகாப்பாக இருப்பார்களே
பச்ச பிள்ளைகளையெல்லாம் காம வெறி பிடித்த மிருகங்கள். வேட்டையாடுவதை தினமும் பார்க்கும் போது இது யதார்த்தமான குமுறல்தான்
இதை சிங்களவன் விமர்சிக்கலாம் தமிழன் ஏன் விமர்சிக்கிறான் ?
விஜயகலா மகேஸ்வரன். என்ன தவறு செய்துவிட்டார் என்று எல்லோருமே பொங்குகிறீர்கள் ?
வன்கொடுமை செய்யப்பட்டதில் உங்கள்சகோதரியோ மகளோ பாதிக்கப்பட்டிருந்தால்
நீங்கள் அமைதியாய் இருப்பார்களா ?
உங்களுக்கு என்ன பிரச்சினை விஜயகலா மகேஸ்வரன் சொன்னது பிரச்சினையா அல்லது புலி திரும்பவாரது பிரச்சினையா?
சிங்கள அரசை பொருத்தவரை புலி திரும்ப வருவதுதான் பிரச்சினை
பாராளுமன்றத்தில் ஆயுதம் தாருங்கள் எங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ரிசாட் பதியூதினும்
வடகிழக்கு இணைப்பு நடந்தால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்ற பொழுது ஏன் இந்த மீடியாக்களும்
இப்போது விஜயகலாவை கண்டிப்போரும் பொங்கவில்லை ?
தமிழ் தமிழன் என்று பொங்கிறோம் ஒரு தாயாய் அந்த உணர்வு அவருக்கு வந்தது தவறா ?
புரியல நாம் தோற்றதர்க்கு காரணம் மட்டும் புரிகிறது
எதையும் தூரநோக்கோடு சிந்திக்க பழகுங்கள் மக்களே
ஒரு மகள் தந்தை இருந்தால் உலகை எதிர்க்க தயங்க மாட்டாள் அந்த பாதுகாப்பும். அப்பா இருக்கிறார் என்ற தைரியமும்தான் அது
நீங்களும். புலி வேணும் என சொல்லும். காலம் வரலாம்