புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி: ரசிகர்கள் உற்சாகம்

188

சர்வதேச டி20 போட்டிகளில் விரைவாக 2000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணித் தலைவர் கோஹ்லி 9 ஓட்டங்களை எடுத்தபோது இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார்.

டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் கோஹ்லி ஆவார். அதே வேளையில், விரைவாக 2000 ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றுள்ளார்.

அவர் 56 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

SHARE