ஆண் பெண் மாணவர்களை கட்டிப்பிடிக்க வைத்து பழமைவாதத்தை உடைக்கிறாராம் இவர். இதற்கு பெயர் பெண் சமத்துவமாம்!
காமத்திற்கும் கலாச்சாரத்திற்கும் முற்போக்கிற்கும் உள்ள இடைவெளி
நன்றாகவே தமிழ் சமூகத்திற்கு தெரியும். இங்கு கீழே இறுக்க அணைத்த மாணவர்கள் எல்லோரும் எந்த மனநிலையில் அணைத்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஒருவன் பிழையான எண்ணத்துடன் நடந்திருந்தாலும் அதற்கு பெயர் கூட்டிக்கொடுத்தல். எதற்கு 18 வயதிற்கு குறைந்தவர்களை மனமுதிர்ச்சி அடையாதவர்கள் என்று கூறுகிறார்கள் தெரியுமா? மனமுதிர்ச்சி அடையாத பிஞ்சுகளிற்கு தரமான கல்வியை வழங்குங்கள். சமத்துவம் என்றால் என்ன அதற்காக யார் யாரெல்லாம் வரலாற்றில் எவ்வாறெல்லாம் போராடினார்கள், யார் முட்டுக்கட்டையாக இருந்தது என்பதை கற்பியுங்கள். அவர்களை சுயபுத்தியுள்ள மனிதர்களாக மாற்றுங்கள். இதுவே ஆசிரியரின் பணி. அதற்கு ஆசிரியர் முதலில் இவற்றை கற்று புரிந்திருக்கவேண்டியது அவசியம். அரைகுறை வேலைத்திட்டங்கள் வீண்வேலை. கண்டிக்கத் தக்கது.
சகோதரியாக இறுக்கி அணைக்கிறேன் என்று உம்முடைய மனைவியை பலரும் கேட்டால் நீர் இவ்வாறுதான் அனுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பீரா? அதையும் புகைப்படம் எடுத்து இங்கு பதிவேற்றுவீரா? இந்த புகைப்படத்தால் யாராவது ஒரு பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டால் அதற்கு நீரா பதில் கூறுவீர்?