கின்னஸ் சாதனையாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாகாண அமைச்சர்

180

கின்னஸ் சாதனை படைத்துள்ள வவுனியாவைச் சேர்ந்த பொறியியலாளர் கனகேஸ்வரன் கணேஸ்வரனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம். இன்று காலை (05.07.2018) இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

உலகின் மிக நீளமான மின்சாரசுற்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் வவுனியவைச் சேர்ந்த இளம்பொறியிலாளரான கனகேஸ்வரன் கணேஸ்வரன். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனான இவர் இசைத்தம்பதிகளான மிருதங்க கலைஞர் கனகேஸ்வரன், வயலின் கலைஞர் சௌதாமணி தம்பதிகளின் புதல்வனாவார். மொறட்டுவ பல்கலைகழகத்தில் எந்தரவியல் பிரிவில் பட்டம் பெற்ற இவர் தனது சொந்த முயற்சியினால் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை கௌரவித்தமையை பெருமையாக கருதுவதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

SHARE