தற்போது முன்னணி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின். இவரை கேலி கிண்டல் செய்யாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லவேண்டும்.
கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர். நடுவர் முதல் போட்டியாளர்கள் என பலருக்கும் இவர் தான் டைம் பாஸ். ஆனால் அப்போதெல்லாம் அவர் அமைதியாக இருந்துவிடுவாராம்.
இதுதான் ரசிகர்களிடம் இவரை அதிகம் சென்றடையவைத்தது. ஆனால் ஆஃப் ஸ்கீரினில் மிகவும் கோபப்படுவாராம். அவரின் குரலை பற்றி பல பேர் கமெண்ட் அடித்தாலும் அதுதான் அவருக்கு பாஸ்டிவ்வாக பெரியளவில் பிரபலமாக்கியது. ஆனால் ஜாக்குலினுக்கு பின்னாலும் சோகம் இருக்கிறது.
அவருக்கு அப்பா கிடையாதாம். அம்மாவும், தம்பியும் ஊரில் இருப்பதால், அவர் ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு படித்து வருகிறாராம். மேலும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங் இரவு தொடங்கி அதிகாலை ஆனாலும் காலேஜ்க்கு கட் அடிக்காமல் போயிடுவாராம்.
அதோடு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்துள்ளாராம்.