விஜய்-முருகதாஸ் இணைந்தாலே படம் வேறலெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. இதனால் அவர்களது கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் சர்கார் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் அண்மையில் தான் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் பட அறிவிப்பை கொண்டாடி வர இன்னொரு பக்கம் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருப்பதை பலரும் எதிர்த்து வந்தனர்.
இந்த நேரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை சமூக வலைதளத்தில் இருந்து அகற்ற விஜய், இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கும் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.