இந்திய வாட்ஸ் ஆப் பயனர்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியீடு

315

உலகளவில் இந்தியாவிலேயே அதிகளவானவர்கள் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்பாடு தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இங்கு வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களில் 25 சதவீதமானவர்கள் எந்தவிதமான வாட்ஸ் ஆப் குழுக்களிலும் இணையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனுப்பப்படும் 10 குறுஞ்செய்திகளில் 9 குறுஞ்செய்திகள் குழுக்களுக்கு வெளியே அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது தனி நபர்களுக்கு அனுப்பப்படுகின்றது.

இந்த தகவலானது வாட்ஸ் ஆப்பினை கொள்வனவு செய்த பேஸ்புக் நிறுவனத்தினால் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SHARE