மீண்டும் ஒரு புதிய மைல்கல்லை தொடும் டோனி

254

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி இன்று 500வது சா்வதேச போட்டியில் களம் இறங்கவுள்ளார்.

ஐசிசி நடத்தக்கூடிய அனைத்து கிண்ணங்களையும் வென்ற ஒரே தலைவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான டோனி தொடா்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் சா்வதேச போட்டிகளில் 500வது போட்டியில் விளையாடும் 3வது இந்திய வீரா் என்ற பெருமையை டோனி பெறுகிறார்.

இதற்கு முன்னர் ஜாம்பவான்களான சச்சின் 664 சர்வதேச போட்டிகளிலும், டிராவிட் 509 சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE