கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

214

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 64 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு பயணிக்கவிருந்தபோதே இவர்களிவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து பவுன்ட்ஸ், சவூதி ரியால் மற்றும் யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளையடுத்து, குறித்த வௌிநாட்டு நாணயங்கள் அரச உடைமையாக்கப்பட்டுள்ளன.

SHARE