தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியீடு

165

தாய்லாந்து குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் தாம் லுவாங் பகுதியில் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, உள்ளூர் பள்ளி ஒன்றின் இளம் கால்பந்து அணி வீரர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து சுற்றுலா சென்றிருந்தனர்.

அப்பொழுது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணாமாக 12 சிறார்களும் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து குகைக்குள் ஒதுங்கியுள்ளனர்.

ஆனால் வெள்ளம் அதிகரித்ததன் காரணாமாக உள்ளே சென்ற 13 பேரும் வெளியில் வரமுடியாமல் உள்ளே சிக்கி தவித்தனர். இதற்கிடையில் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி மீட்பு படையினர் வந்த 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து அவர்களை உயிருடன் மீட்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்நாட்டு அரசு, இரண்டு வாரங்களுக்கு பிறகு நேற்று வெளிநாட்டை சேர்ந்த 13 முத்துகுளிப்பவர்கள் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 5 கடற்படை வீரர்களுடன் இணைந்து 13 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்..

அதன்படி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, Nattawut Thakansai (14), Prajak Sutham (14), Pipat Bodhi (15) மற்றும் Mongkhol Boonpiam (14) என்ற 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். சிறுவர்கள் மீட்கப்பட்ட உடனே வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் குகையில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக குகையில் சிக்கியுள்ள மற்ற 9 பேரையும் மீட்ட்கும் பணிகள் இன்றும் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE