கனடாவில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்விந்தர் (19) மற்றும் பவன் பிரீத் (20) ஆகிய இந்தியாவை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறினார்கள்.
இந்நிலையில் ஒன்றாறியோவில் உள்ள ஏரிக்கு அர்விந்தரும், பவனும் சென்ற நிலையில் தண்ணீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.
இது குறித்து அர்விந்தர் மற்றும் பவன் ஆகிய இருவரும் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் தர்ஷன் கைலா கூறுகையில், நண்பர்களுடன் ஜாலியாக ஊரை சுற்றி பார்க்க பவனும், அர்விந்தரும் சென்ற நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
ஏரியின் அருகில் இருவரும் நின்று கொண்டிருந்த போது ஒருவர் நிலைதடுமாறி உள்ளே விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற மற்றொருவர் முயன்ற நிலையில் அவரும் நீரில் விழுந்ததால் இருவரும் இறந்துள்ளனர்.
கனடாவுக்கு புதிதாக வரும் நபர்கள் தண்ணீர் இருக்கும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம் என கூறியுள்ளார்.