மட்டக்களப்பில் வெடிப்பொருட்களுடன் மூவர் கைது

177
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை ஆற்றுப் பகுதியில் வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 3 டைனமெட் என அழைக்கப்படும் வெடிப்பொருட்கள் மற்றும் படகு ஒன்றும் அதன் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வவுணதீவு விசேட அதிரடி படைப்பிரினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்குறித்த பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லவிருந்த படகினை சோதனை செய்து வெடிப்பொருட்கனை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE