
ஊடகவியலாளர் பா.திருஞானம் கல்வி அமைச்சின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கனின் ஊடக பிரிவின் ஊடக இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி இந்தியாவின் 95 மில்லியன் ரூபா செலவிலும் கவ்வி அமைச்சின் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்திலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி 160 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றது. குறுகிய காலத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபட்டு வருகின்றமையும் இந்த பாடசாலைகளுக்கு பொருத்தமாக செயலாற்ற ஊடகவியலாளர் ஒருவரை பாடசாலை சமூகம் தெரிவு செய்தமையும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.