பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்ற மற்றும் வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகப்படியாக நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கேட்போரை அதிர்ச்சியடைய செய்திடும் வகையிலான மற்றுமோர் சம்பவம் சிவகங்கையில் அரங்கேறியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரை அடுத்த அச்சரம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. வாய் பேச முடியாதவர். இவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள் ஆவர்.
நேற்று முன்தினம் இவரது தந்தையும், தாயும் வெளியில் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் மாணிக்கம் என்ற நபர் வாய் பேச முடியாத சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி பரிதாபகரமாக இறந்துபோயுள்ளார். இது தொடர்பாக மாணிக்கத்தை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
இத்தகைய கொடுமைகளையெல்லாம் கலைந்திட அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுவே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.