சினிமாவிலிருந்து ஒதுங்கும் சமந்தா!…கணவர் கூறிய பதிலால் அதிர்ந்து போன ரசிகர்கள்.

459

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய படங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தது.

இதுக்குறித்து நாகசைதன்யா கூறுகையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சமந்தா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். ஆனால், அவருக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகின்றது, அதையும் அவரே தான் முடிவு செய்துள்ளார்,

அதனால், சில நாட்கள் நடிக்காமல் இருப்பார். அதன் பிறகு எப்போதும் போல் படங்களில் நடிப்பார் என்று சமந்தாவின் கணவர் நாகசைதன்யா விளக்கம் தந்துள்ளார்.

SHARE