அம்மா வழியைப் பின்பற்றும் எண்ணம் இல்லை: ஜான்வி

509

‘தடக்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ஜான்வி, தனது அம்மா ஸ்ரீதேவியின் வழியை பின்பற்றவில்லை என கூறியுள்ளார்.

மராத்தியில் வரவேற்பைப் பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்காக ‘தடக்’ உருவாகி வருகிறது.

சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து படம் வௌியாகத் தயாராகி வருகிறது.

ஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி போலவே இந்திய அளவில் பெரிய நடிகையாக விரும்புவதாக செய்திகள் வந்தன.

இதற்கு பதில் அளித்துள்ள ஜான்வி,

நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால், அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை.

என்று கூறியிருக்கிறார்.

SHARE