அட்டன் சலங்கந்த வீதியில் பஸ் விபத்து

533
நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் மு.இராமச்சந்திரன்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சலங்கந்த பிரதான பாதையில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதுடன் அவ் வீதித்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அட்டனிலிருந்து பயணிகளை சலங்கந்தை நோக்கி ஏற்றிச்சென்ற அட்டன் டிப்போவிற்கு சொந்தமான இ.போ.ச. பஸ் வண்டியை 15.07.2017 இரவு நீர்வடிகாணில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
எதிரே வந்த வாகனத்திற்கு இடம்கொடுக்க முற்பட்ட போதே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பஸ்வண்டியை அகற்ற நுவரெலியா டிப்போவிலிருந்து பாரம் தூக்கியை வரவழைத்துள்ளதாக அட்டன் டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த வீதித்தின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்களும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
SHARE