தமிழ் இனத்தின் போராட்ட வரலாற்றை குழிதோண்டிப் புதைக்கும் அல்பிரட் துரையப்பாக்கள் சுடப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது-இரணியன்

276

தமிழ் இனத்தின் போராட்ட வரலாற்றை குழிதோண்டிப்
புதைக்கும் அல்பிரட் துரையப்பாக்கள் சுடப்பட
வேண்டிய காலம் வந்துவிட்டது-இரணியன்

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று போர், இரண்டாவது போருக்கு முற்பட்ட காலம். இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களது போராட்ட வரலாறுகள் தொடர்கின்றன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை அரசாங்கம் வழங்குவதற்கு 1948 இலிருந்து இன்று வரை பின்னடித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலைமை இதுவரையிலும் மாற்றப்படவில்லை. மாற்றத்திற்கான பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் இலங்கை அரசினுடைய கடுமையான போக்கு என்பது ஒரு இன அழிப்புப் போரையே நடத்தி முடித்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி தமிழினத்தையே அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டது. இதுவே கடந்தகால வரலாறு.
எந்தவொரு ஆயுதப் போராட்டக் குழுக்களையும் அல்லது தமிழ் சார்ந்த கட்சிகளையும் ஒன்றினைந்து போராட ஒருபோதும் இலங்கை அரசு அனுமதித்ததில்லை. குறிப்பாக டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்கள் இலங்கை அரசின் வல்லாதிக்கத்திற்கு எதிராகவே போர் தொடுத்திருந்தன.

தமிழினத்திற்கு எதிராக அடக்குமுறைகள் தொடர்ந்து செல்லவே அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களினது போராட்டமும் 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர் இலங்கைத் தீவில் எந்தவொரு போராட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் தான் ஏனைய ஆயுதக்குழுக்களை முன்னேறக் கூடாதென்று ஓரங்கட்டியதாக தற்பொழுது இருக்கக் கூடிய இவ் இயக்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். அப்படியாகவிருந்தால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கான அடக்கு முறைகள் தொடர்ந்தும் செல்லுகின்றது. இதனைத் தட்டிக் கேட்க ஏன் இவர்கள் முன்வரவில்லை? மாற்றுவழி ஒன்றை ஆரம்பித்து ஆயுதப் போராட்டத்தை ஏன் தொடங்கவில்லை?
30,000படையணியைக் கொண்டிருந்த புளொட் இயக்கம் தன்னுடைய ஆயுதப் பேரணியை ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக ஏன் கட்டவிழ்த்து விடவில்லை? 5000 படையணியைக் கொண்டிருந்த டெலோ 4000 படையணியைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். ஏன் தற்போதைய இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுக்க முன்வரவில்லை. வெறுமனயே வீரவசனங்களைப் பேசிக் கொண்டு, தமிழ் மக்களுக்கானத் தீர்வில்லையென்றால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கநேரிடும் என்றும் , சிங்களதேசத்திற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறிக் கொள்கின்றார்களே தவிர யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் இவ் ஆயுத இயக்கங்கள் ஏன் சிங்கள அரசாங்கத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக மீண்டும் போர் தொடுக்கவில்லை? இதனைவிடவும் தமிழினத்தின் போராட்டத்தை வேறு திசைக்குத் திருப்பவும், தமிழினம் சிங்கள இனத்தின் அடக்குமுறைக் கெதிராக போராடியது என்பதனை மாற்றியமைப்பதற்குமாகவே அரசாங்கம் செயற்படுகிறதே தவிர தமிழினத்தின் நலனில் எவ்வித அக்கறையும் இல்லை.

தமிழினம் ஒன்று பட்டு தமது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், அரசியல் நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையே சாரும். போனஸ் ஆசனமாகவும் மூன்று ஆசனம் கிடைக்கப் பெற்றது.
தமிழினத்தின் ஒற்றுமை என்கின்ற ஒன்றை செயற்படுத்தி வருகின்ற போது அதனைக் குழப்பும் செயற்பாடாகவே தமிழினத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சிந்திக்கின்றார்கள், செயற்படுகின்றார்கள் மற்றும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுகின்றார்கள்.

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை ஒருபோதும் இலங்கை அரசு வழங்கப் போவதில்லை என்று தெரிந்தும் அரசியல் நடவடிக்கைகளுக் கூடாக வெல்லலாம் என்று கூறிக் கொண்டு மீண்டும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடாத்துகின்றார்கள் இது ‘சானேற முழம் சறுக்கும்’ நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பேசும் இளம் அரசியல் வாதிகள் ஆகினும் , முதிர்நல அரசியல்வாதிகளாகினும் அரசுக்கு முண்டு கொடுக்கும் சொற்பதங்களையே உபயோகிக்கின்றார்கள்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நல்லவரோ கெட்டவரோ என்பதற்கு அப்பால் ‘தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் கிடைக்கப் பெற வேண்டும் அதன் பின்பே அபிவிருத்தி என்பது இக்கால கட்டத்திற்கு ஏற்புடையது’ என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறாக ஒவ்வொரு தலைவர்களும் சிந்தித்து செயற்படுவார்களாக இருந்தால் தமிழ் மக்களுடைய எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் சிறப்பாக முன்னெடுக்க முடியும்.
தமிழினத்தின் போராட்ட வரலாறு பாதுகாக்கப் படவேண்டும்: இல்லையேல் ஆபத்து.

சர்வதேச நாடுகளின் உதவியுடனேயே அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதில் முக்கிய பாத்திரமாக இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளும் பங்கு பற்றியிருந்தன. இவற்றுக்கு உறுதுணையாக 33 நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடிக்க உதவியாக இருந்தன. சூடுசுரணையற்ற தமிழ் அரசியல்வாதிகள் அல்லது அமைப்பு சார்ந்தவர்கள் ஏன் ஒவ்வொருவர் மீது ஒவ்வொருவராகப் பிழைகூறுகின்றீர்கள்? உங்களால் சிங்கள அரசாங்கத்திற்கு என்ன பாதிப்பை உண்டு பண்ண முடியும்? உங்களால் சிங்கள அரசு அதிருப்தியடைந்து தமிழ் மக்களுக்கான தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அளிக்க முன்வரவேண்டும்.
டட்லி சேனநாயக்க முதல் மைத்திரி பால சிறிசேன வரை கிழித்தெரியப்பட்ட ஒப்பந்தங்களை நாம் அறிந்திருக்கிறோம். அதைவிட சமாதான காலகட்டத்தில் 07 சர்வதேச பேச்சு வார்த்தைகளும் 14 உள்ள10ர் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. அக்காலகட்டத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப் பொன்றை மேற்கொண்டிருந்தார்.
தெற்காசியாவில் எந்தவொரு தலைவர்களுக்கும் 1000 கணக்கில் ஊடகவியலாளர்கள் குவிந்ததாக வரலாறில்லை. இதில் உள்ள10ர் சர்வதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நோர்வே அரசாங்கத்தினது சதித்திட்டமே விடுதலைப் புலிகளினது அடுத்த கட்ட நடவடிக்கையினை சீர்குலைக்கும் ஓர் இராஜதந்திர நகர்வாகக் காணப்பட்டது. ஆயுத வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்பதால் சமாதானப் பேச்சு வார்த்தை எனும் பேரில் விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்து மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசாங்கத்திற்கு எதிராக கடும் போரை மேற்கொண்டது.
இறுதி யுத்தத்தில் மட்டும் 45000 இராணுவம் கொல்லப்பட்டிருந்தன. பல்லாயிரக் கணக்கான இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய போராட்டம் இறுதிவரையிலும் தமிழ் மக்களுக்காகவே அமையப் பெற்றிருந்தன. ஏனைய ஆயுதக் கட்சியினைப் போன்றல்ல. தற்பொழுது தமிழினத்தின் விடுதலை மீது அக்கறை கொண்டுள்ள தமிழினப் போராட்டக் கட்சிகள், ஆயுதக் கட்சிகள் சிங்கள அரசிற்கு எதிராகவும், அதன் அடக்கு முறைக்கு எதிராகவும் போராட முன்வரவேண்டும்.

இன்னுமொரு பத்து வருடம் இதே நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களுக்கான போராட்ட வடிவம் மாற்றமடையும். தமிழ் மக்களுக்கான போராட்ட நிகழ்வு நடந்த வரலாறே அறியப்படாதுபோகும். வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கானதல்ல. இது பௌத்த நாடு, இது பௌத்தர்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடப்படும்.
ஆகவே தமிழ் மக்களாகிய நாம் எந்தத் தரப்பாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிரானதாகவே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். யுத்தத்துக்குப் பின்னர் பல தமிழ் அமைப்புக்கள் இராணுவப் புலணாய்வாளர்களால் உள்வாங்கப் பட்டுள்ளனர். அப்படி உள்வாங்கப்பட்டோரையே இராணுவப் புலணாய்வாளர்கள் சுயாதீனமாக இயங்க விட்டுள்ளனர். இதனைத் தமிழ் மக்களாகிய நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
வெறுமனயே நிகழ்வுகளையும் நிகழ்சிகளையும் கொண்டாடிக் கொண்டிருப்பதில் எந்தப் பிரயோஜனமுமில்லை. சிங்கள வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராட தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும். இதில் உங்களில் எத்தனை பேர் ஆயத்தமாக இருக்கின்றீர்கள்? இவ்வாறு எமது எழுத்தைப் பதிவு செய்கின்ற பொழுது பலருக்கு என்மேல் கோபம் வரலாம். இவ்வாறு எழுதியவரைக் கொலை செய்ய வேண்டுமென்று எண்ணம் தோன்றலாம். இதுவரையிலும் 34 ஊடகவியலாளர்கள் தமது உயிரை எமது தேச விடுதலைக்காக தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரசாங்கத்தினது செயற்பாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இவர்களினால் தமிழ் தாயகம் மீட்கப்படும் என்ற அச்சத்தினால் தான் தமிழர்களை வைத்தே தமிழர்களை அழிக்கும் தந்திரோபாயத்தை அரசாங்கம் சர்வதேச உதவிகளுடன் மேற்கொண்டது.

அந்த வலையில் சிக்கியவர்தான் இறுதியாக விடுதலைப்புலிகளின் இராணுவத் தலைவராகவிருந்த கருணாஅம்மான் அவர்கள். இன்று அவரும் அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்டு அவர்களுடைய நிகழ்சி நிரலிற்கேற்ப தன்னுடைய அரசியல் செயற்பாட்டை செய்து வருகின்றார். இதற்காகவே இலங்கையின் ஏதோவொரு பகுதியில் ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நீங்கள் ஒத்துழைப்பதனூடாகவும் தமிழ் அரசியல் வாதிகள், தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் சார்ந்த அரசியல் அமைப்புக்கள் ஒத்துழைப்பதனூடாகவுமே தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அரசாங்கத்தின் கைக் கூலிகளாக செயற்படுவதைப் பார்க்கிலும் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி இந்த மண்ணில் சாவதே மேல். வடக்குக் கிழக்கில் சிங்கள மயமாக்கல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை இலங்கை அரசு சர்வதேச உதவியுடனாவது பெற்றுத் தருமென்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது. தமிழினம் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் கொத்துக் கொத்தாக அழித்தொழிக்கப்பட்ட போது திரும்பிப் பார்க்காத சர்வதேசமும் தட்டிக்கேட்காத அரசியல் வாதிகளும் இன்று கபடநாடகம் ஆடுகின்றார்கள்.

‘தமிழ் அரசியல் தலைவர்களுக்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் ஒரு சவாலாக இதனை நான் கூறுகின்றேன். நீங்கள் எடுக்கின்ற எந்தவொரு முடிவுகளும் அரசாங்கத்திற்கு எதிராக ஏன் அமையக் கூடாது? அதனை செயற்படுத்துகின்ற போது அரசாங்கம் எதிர்க்கத்தான் செய்யும்.’ அதற்காக நாம் அவர்களின் அடிவருடிகளாக மாறிவிடக் கூடாது. போரின் தந்திரோபாயங்கள் மாற்றப்படுவது போன்று தமிழ் மக்களாகிய நாம் எமது தந்திரோபாயங்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிங்களக் கட்சிகள் பலவாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமென்று வருகின்ற பொழுது தென்னிலங்கையே குழப்பத்தினை உண்டு பண்ணுகின்றது. இதற்கான குழுவைப் புத்த பிக்குக்கள் தலைமையிலேயே ஏற்படுத்தியுள்ளது.
அரசின் தலைவர் தமிழினத்திற்கு சார்பாகச் செயற்பட்டாலும் அவற்றைப் பிழையெனக் கூறி பாராளுமன்றில் 2ஃ3 பெரும்பாண்மைத் தீர்வின் பின்னே நிகழ்த்தப் படவேண்டுமென்று சிங்கள கட்சிகள் அனைத்தும் ஓர் குடையின் கீழ் நிற்கின்றார்கள். தமிழ் கட்சிகளுக்கிடையே இவ்வாறான ஒற்றுமையில்லை அது ஏன்?
‘தமிழ் அரசுக்கட்சி ஓர் முடிவை எடுத்தால் அது தமிழ் தேசிய முன்னணிக்குப் பிடிக்காது. தமிழ் விடுதலைக் கூட்டணி முடிவெடுத்தால் தமிழ் அரசுக் கட்சிக்குப் பிடிக்காது. ஏனைய ஆயுதக் கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை முன்னெடுத்தால் தமிழ் அரசியல் கட்சிக்குப் பிடிக்காது. இப்படியே இவர்கள் விடாக்கொண்டன், கொடாக்கொண்டன் போல் செயற்பட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களுடைய அரசியல் பயணத்திற்கு அல்லது தீர்வுத்திட்டத்திற்கு சாத்தியமாகாதவொரு விடயமாகும்.’

தமிழ் மக்களுடைய தீர்வுத்திட்டத்தில் தற்போதுள்ள தேவை என்னவென்றால் வடகிழக்கு இணைப்பு, தேசியம் சுயநிர்ணய உரிமை, அடிப்படை உரிமை சார்ந்த விடயங்கள், வடகிழக்கிலிருந்து இராணுவம் வெயியேறுதல், காணி சுவீகரிக்கப்படுதலைத் தவிர்த்தல். இவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்காகவே தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைவது அவசியம்.
யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதில் நாம் சந்தோஷமாக இருப்போமாகவிருந்தால் தொடர்ந்தும் நாம் சிங்கள இனத்தின் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்பொழுது தலையில் கைவைப்பதில் எவ்வித பிரயோஜனமுமில்லை. உங்களது கட்சி அரசியலை வளர்ப்பதற்காகத் தொடர்ந்தும் செயற்படுவீர்களாகவிருந்தால் அல்பேட் துரையப்பா போன்று இருக்கக் கூடிய கட்சித் தலைவர்களும் சுட்டுக் கொல்லப்படும் நிலைமை மீண்டும் தோற்றுவிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்னும் விடயத்தில் ஒன்றினைந்து முன்னின்று செயற்பட வேண்டியதே காலத்தின் தேவையாக இருக்கின்றது.

 

SHARE