
நா.க.த அரசின் விளையாட்டு மற்றும் சமூகநலன் பிரதியமைச்சர் திரு சொக்கலிங்கம் யோகலிங்கம்(TGTE SCH) அவர்களின் நெறிப்படுத்தலுடன் சொர்ணலிங்கம் யதுர்சன் TGTE SCH ஊடக செயற்பாட்டாளரின் ஒருங்கிணைப்பில் உறுப்பினர்களான நுஜிதன் இராசேந்திரம் ,பொன்ராசா புவலோயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
southend leigh-on-sea பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் காலை 10.00 அளவில் ஆரம்பித்த இச்சந்திப்பில் முக்கியமாக ஐ நா மனித உரிமைகள் சபையினால் கொண்டுவரப்பட்ட 30/1 , 34/1 போன்ற தீர்மானங்களில் உள்ளவை எந்தளவிற்கு ஸ்ரீ லங்கா நிறைவேற்றியுள்ளது என்பது பற்றி ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன் தாயகத்தில் நடைபெற்றுவரும் கட்டமைப்பிலான இனவழிப்பு புதிதாக அமையவுள்ள அரசியலமைப்பின் குறைபாடுகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணியிலுள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல் தொடர்பாகவும். அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற காணி அபகரிப்பு முயற்சி பற்றியும் இதனைவிட காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஸ்ரீ லங்காவின் மெளனப்போக்கு போன்றவை கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீ லங்காவை ஏன் சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பது பற்றிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
சந்திப்பின் இறுதியில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பிரிட்டன் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 24ம் திகதி கேள்வி முன்வைப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.