TMVP ஒட்டுக்குழுவில் அரசியல் சாணக்கியம் கொண்டுவரும் தந்திர செயற்பாடுகள் கொண்ட பொதுத் செயலாளர் பிரசாந்தனை ஒரம் கட்டும் பிள்ளையான் மாற்று குழு அண்மையில் இவரின் செயற்பாடு ஒர் பெயரளவு செயலாளராக செயற்பாட்டுக்க கொண்டு இருக்கிறார்.
அண்மையில் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் பேத்தாளை பகுதியில் நடைபெற்றாதாம் இதில் கலந்து கொண்ட சில முக்கிய பிள்ளையானின் ஆதரவாளர்கள் பிரசாந்தனை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஒரு புதிய சட்டத்துரையில் அனுபவம் மிக்க ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றம் இந்த கலந்துரையாடலில் பிரசாந்தன் தரப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர்களை அழைக்க வில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த பிரசாந்தன், TMVP ஒட்டுக்குழுவின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதும், ஒட்டுக்குழு தலைவர் பிள்ளையானின் பலம், பலவீனம் என்ன என்பதும் தனக்கு மாத்திரம் தெரியும் என்பதால் எதிர்காலத்தில் TMVP ஒட்டுக்குழு கட்சிக்கு ஏற்பட இருக்கும் வீழ்ச்சியை பற்றி தனக்கு நெருக்கமானர்களுக்கு கூறியுள்ளார். இந்த பிரச்சினை பிள்ளையானின் சிறைவாசம், பிள்ளையானினுக்கு வர இருக்கும் தண்டனையில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு உறைக்குள் இரு வாள்கள் இருப்பதை யார் தான் அறிவார்.