சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியின் போது தனக்கு கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் பணம் முழுவதையும் நெசவாளர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக தான் அளிப்பதாக ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்-ராஜலட்சுமி என்ற தம்பதி கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சியில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களால் இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது.
இதில் ராஜலட்சுமி பல முறை டேன்ஜர் ஜோனுக்கு சென்றாலும், மக்கள் தங்களுடைய ஓட்டிங் மூலம் அவரை காப்பாற்றினர்.
இருப்பினும் ராஜலட்சுமியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போய்விட்டது. ஆனாலும் அவரின் கணவர் செந்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, 50 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசுத் தொகையை வென்றார்.
இதற்கிடையில் இறுதிப் போட்டியின் போது ராஜலட்சுமிக்கு 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு கொடுக்கப்பட்டது. அதை ராஜலட்சுமி இந்த பணத்தை நெசவாளர்களின் குழந்தைகளின் படிப்பு செல்விற்கு தருவதாக தெரிவித்தார்.
இதனால் இறுதிப் போட்டி நடந்த நேரம் அரங்கமே அதிர்ந்தது.