முன்னணி பாடசாலையின் காவலாளி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பக்கற்றுக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையின் வாயிலில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2.8 கிராம் நிறையுடைய 6 ஹெரோயின் போதைப்பொருள் பக்கற்றுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட காவலாளியிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.