நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக விலை அதிகரிப்பை குறைக்க கோரியும் அட்டன் மணிக்கூண்டு சந்தியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது.




மக்கள் விடுதலை முன்னணியின் நுவரரெலியா மாவட்ட அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமாகிய மஞ்சுள சுரவீர தலைமையில் 18.07.2018 மாலை 3.30 மணியளவில் இவ் ஆர்பாட்டம் இடம்பெற்றது.
நாட்டில் தற்போது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்தினால் ஏரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பானது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் வகையிலுள்ளது எனவே எரிபொருள் விலை அதிகரிப்பை அரசு உடனடியாக குறைக்க வேண்டும் அவ்வாறு இல்லை எனின் நாடுதளுவிய ரீதியில் பாரிய ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர் ஆர்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை குறை. பஸ்கட்டணத்தை குறை. வரி அரவீடு எமக்காகவா அல்லது உமது சுகத்துக்காகவா. எனும் வாசகங்களுடன் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு கோசங்கள் எழுப்யவண்ணம் மக்கள் விடுதலை முன்னனியின் ஆதரவாளர்களினால் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.