ஹேரத்திடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றேன்- மகராஜ்

163

இந்திய துணைகண்ட ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றேன் என தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் தெரிவித்துள்ளார்

ஹெரத்தின் பந்துவீச்சில் உள்ள துல்லியமும் தொடர்ச்சியும் மிகச்சிறப்பான விடயங்கள்,இடது கைசுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயல்வது வழமை,ஆனால் ஹேரத் அதனை விட விசேடமாக ஒன்றை செய்கின்றார் அவர் பந்தை தனது விருப்பத்தின் படி சுழலச்செய்கின்றார் என மகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப பந்தை சுழலச்செய்கின்றார் வித்தை காட்டுகின்றார் நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் விடயமிது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் நான் அவருடன் உரையாடினேன் அவர் சில யுக்திகளை பகிர்ந்துகொண்டார்,ஆனால் இந்திய துணைகண்ட ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் மகராஜ் தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு பந்து வீசினாலும் உங்கள் லென்த் தொடர்ச்சியாகயிருக்கவேண்டும் முதல் டெஸ்டின் முதல் இனிங்சில் அதனை நான் செய்யவில்லை இரண்டாவது இனிங்சில் அதனை செய்தேன்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது இலங்கை அணியினர் மிகச்சிறப்பாக விளையாடுவார்கள்,அவுஸ்திரேலியாவை இலங்கையில் தோற்கடித்தவேளை அவர்கள் அதனை நிருபித்தார்கள், எனதெரிவித்துள்ள கேசவ் மகராஜ் மீண்டு வருவதில் தென்னாபிரிக்க அணியினர் மிகச்சிறப்பானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE