மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
“சிறுமி நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு அதிகமாக வியர்வை வெளியேறியுள்ளது.
வாந்தியும் எடுத்த நிலையில் அரை மயக்கமடைந்துள்ளது. குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றுள்ளனர். குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தையின் இறப்புக்கு மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம்” என்று மரண விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மரண விசாரணையை மேற்கொண்டார்.