இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்புவில் இன்று தொடங்கியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியுள்ளது. கடந்த போட்டியில் இலங்கை அணி அபார சுழற்பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சாய்ந்தது. எனவே, இலங்கையின் சுழல் தாக்குதலை சமாளித்தால் தென் ஆப்பிரிக்க அணி தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.
இந்த போட்டி குறித்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் கூறுகையில்,
‘உள்ளூரில் தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தென் ஆப்பிரிக்க அணி உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது. அவர்களை வீழ்த்தும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது’ என தெரிவித்துள்ளார்.
