தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்தமாக, செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் “பொடுகு” என்கின்றோம்.
தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும்.
சிலர் எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதனை சரி செய்ய கீழ்குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றுங்கள்.
தேவையானவை
- பிளாக் டீ டீகாஷன்
- எலுமிச்சை
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பின்னரே டீ தூளை அதனுள் போடவும்.
பின்பு அந்த தண்ணீரில் டீயின் கலர் இறங்கிய பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
பிறகு அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும்.
30 நிமிடம் இந்த கலவையை ஊற விடவும். பிறகு இதனை தலையில் ஒவ்வொரு பாகமாக பிரித்து அப்ளை செய்யவும்.
25 நிமிடம் கழித்து தலையை மிதமான நீரில் அலச வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை விரைவில் குணமடையும்.