திருமணமான புதுமணத்தம்பதியினர் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த ஒன்று தேனிலவு.
தேனிலவு என்பது தேவையான ஒன்று. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும்.
தேனிலவு என்றால் மலைபிரதேசங்கள், வெளிநாடுகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, எவ்வித தொந்தரவும் இல்லாமல் தனிமை கிடைக்கும் இடங்களுக்கும் தேனிலவு செல்லலாம்.
தேனிலவு செல்லும் இடத்தினை சரியாக தெரிவு செய்து, தேனிலவை பல காலங்களுக்கு நினைத்து சந்தோஷப்படும் இனிமையான நிகழ்வாக தம்பதிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதோ இலங்கையில் புதுமணத்தம்பதியினர் தேனிலவு செல்வதற்கான சிறந்த இடங்கள்,
Bentota
இங்கு நிறைந்திருக்கும் இயற்கை புதுமணத்தம்பதியினரை தனது மடியில் போட்டு தாலாட்டும். எழில்மிகு கடற்கரை மற்றும் அழகிய குடில்களில் தம்பதியினர் தங்கள் தேனிலவை கழிக்கலாம்.
குறிப்பாக இங்கு காதலர்களுக்கு தனிமை அதிகம் கிடைக்கிறது, சாகச ஆர்வலர்களுக்கு இது சிறந்த இடம். மேலும் படகோட்டம் போன்றவையும் இங்கு உள்ளன. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இங்கு தேனிலவு செல்வதற்கு சிறந்த மாதம்.
Mirissa
இலங்கையின் மிகவும் ரொமான்டிக்கான இடம். இது ஒரு வெப்பமண்டல சொர்க்கம் ஆகும். மணல்குவியல்கள் நிறைந்த கடற்கரையில் அமர்ந்து தம்பதியர் கண்கவர் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை ரசிக்கலாம்.
சில ஆச்சரியமான திமிங்கலங்கள் மற்றும் டால்பின் பார்த்து மகிழுங்கள். இந்த அழகிய கடற்கரையில் உங்கள் அன்பான காதல் அதிகமாகும் என்பது நிச்சயம்.
சிறந்த மாதம் – நவம்பர் முதல் ஏப்ரல்
Tangalle
இது இலங்கையில் தேனிலவுக்கான சிறந்த இடங்களுள் ஒன்றாகும். மேற்கு பகுதியில் ஹொட்டல்கள் மற்றும் வில்லாக்கள் உள்ளன. கிழக்கில், அழகிய சதுப்பு நிலப்பகுதிகள் மற்றும் மென்மையான மணல் கடற்கரைகள் உள்ளன.
இந்த கடற்கரையின் அழகினை ரசிக்கையில் உங்கள் துணையிடம் மீண்டும் மீண்டும் காதலை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும்.
சிறந்த மாதம் – நவம்பர் முதல் ஏப்ரல்
Nuwara Eliya
இலங்கை நாட்டின் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படுகிறது. இது அழகான மலை நகரம் ஆகும். பசுமையான பாதைகள், சிவப்பு செங்கல் கொண்டு வீடுகள், மலைகள் நிறைந்த இங்கு இருக்கும்போது மேற்கத்திய கலாசாரத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை கொடுக்கும்.
Lover’s Leap Fall, Laksapana Falls, Rawana falls அகிய நீர்வீழ்ச்சிகள் இங்கு உள்ளன. தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் இதனையும் பார்வையிடலாம்.
சிறந்த மாதம் டிசம்பர் முதல் ஏப்ரல்
Trincomalee
இங்கு உள்ள கடற்கரைகள் உப்புவேலி மற்றும் நிலவெளி ஆகியவற்றின் வழியாக அமைதியாக நடந்து செல்ல இனிமையாக இருக்கும். தெருக்களில் மயக்கும் ரோஜாக்களைப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்க காட்சிகளில் ஒன்று.
pigeon island- வெள்ளை மணல் கடற்கரை கன்னியா வெண்ணீர் ஊற்று – ஐ நீங்கள் பார்வையிடலாம்.
சிறந்த மாதம்: மே முதல் அக்டோபர்