வவுனியாவில் கடையை உடைத்து பணம் திருட்டு

150

வவுனியா வைரவபுளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள சில்லறை கடையை இரவு இனம்தெரியாத நபர்களால் உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தன நிலையத்தை மூடிவிட்டு இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகை தந்த போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE